சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் இந்தியாவின் கேரளா மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் அமைந்துள்ள ஓர் இந்து கோவிலுக்குள் கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடிகளைப் பயன்படுத்தி அவர் காணொளி எடுத்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
9 இந்திய ஊழியர்கள் சென்ற லாரி மீது அதிவேகமாக மோதிய கார்… ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை
இலங்கையை வம்சாவளியாக கொண்ட 49 வயதுமிக்க சிங்கப்பூரர் திருநீபனர் என்ற அந்த ஆடவர் சுற்றுலாப் பயணியாக கேரளாவுக்கு சென்றுள்ளார்.
கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி காலை சுமார் 9:25 மணியளவில், கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடியை அணிந்திருந்த அவர், ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலுக்குள் சென்றுள்ளார்.
அந்த கோயிலுக்குள் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
கூடுதலாக கோயிலுக்குள் அனைத்து மின் சாதனங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறிய திருநீபனர், கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியை அணிந்திருந்ததை கவனித்த கோயில் பாதுகாப்பு ஊழியர்கள், அவரை பிடித்து உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

