Last Updated:
புதிய குழு தனது ஆய்வுகளை மேற்கொண்டு, சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் குறித்த பரிந்துரைகளை வழங்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைப்பதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
தற்போதைய 7-வது ஊதியக் குழுவின் 10 ஆண்டு கால அவகாசம் டிசம்பர் 31, 2025 அன்றுடன் முடிவடைகிறது. இதன் தொடர்ச்சியாக, புதிய ஊதியக் குழுவிற்கான பணிக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை 2025 அக்டோபரில் ஒப்புதல் அளித்ததுடன், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நவம்பர் 3, 2025 அன்று வெளியிட்டது.
இந்தப் புதிய குழு தனது ஆய்வுகளை மேற்கொண்டு, சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் குறித்த பரிந்துரைகளை வழங்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குழுவின் இறுதி அறிக்கை 2027 மே அல்லது ஜூன் மாதவாக்கில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஊதியக் கட்டமைப்பு அமலுக்கு வரும் தேதியைப் பொறுத்தவரை, முந்தைய நடைமுறைகளின்படி ஜனவரி 1, 2026 முதல் இது நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும். குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்ட பிறகு, ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றாலும், 2026 ஜனவரி முதலே கணக்கிடப்பட்டு அந்த நிலுவைத் தொகை (Arrears) வழங்கப்படும்.
இந்த மாற்றத்தின் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் தற்போதைய ரூ. 18,000-லிருந்து ரூ. 21,600 முதல் ரூ. 26,000 வரை உயர வாய்ப்புள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 1 முதல் உயரப்போகும் அடிப்படைச் சம்பளம்.. விபரம் என்ன?


