அந்த வகையில் நாங்கள் இங்கே அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Scheme) பற்றி பேசுகிறோம். இதில் முதலீடு செய்வதன் மூலம் எந்தவித ஆபத்தும் இல்லாமல் ஒரு நிலையான வருமானத்தைப் பெறலாம். தற்போது, இது 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரூ.61,500 வட்டியாகப் பெறலாம். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வரை சம்பாதிக்க முடியும். தவிர வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகையும் கிடைக்கிறது.


