பொதுவாக, காலாவதி தேதி (expiry date) மற்றும் best before ஆகியவைக்கு ஒரே அர்த்தம் என மக்கள் கருதுகிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை. இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. முழுமையான தகவல் இல்லாததால், சில நேரங்களில் பயன்படுத்த தகுதியற்ற பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, மருந்துகள், ஒப்பனைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இதில் அடங்கும். ஆகையால், இவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொண்டால், மீண்டும் இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம். அதன்படி, இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை தற்போது அறிந்துகொள்வோம்.


