Last Updated:
முந்தைய சீசன்களை விடவும் நடப்பு சீசனில் சென்னை அணியின் நிர்வாகம் அதிக எண்ணிக்கையில் இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் விளையாடும் 11 வீரர்களை கணித்துள்ளார் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.
முந்தைய சீசன்களை விடவும் நடப்பு சீசனில் சென்னை அணியின் நிர்வாகம் அதிக எண்ணிக்கையில் இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா போன்ற Uncapped வீரர்களை சென்னை அணி தலா ரூ. 14.20 கோடிக்கு வாங்கி வியப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதைத் தொடர்ந்து சென்னை அணி அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் நிலையில் அதன் ப்ளேயிங் லெவன் எப்படி அமையலாம் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கணித்துள்ளார். அவர் கணித்துள்ள ப்ளேயிங் லெவனில், ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, டெவால்ட் ப்ரெவிஸ், பிரசாந்த் வீர், தோனி, அகில் ஹொசைன்/மேட் ஹென்றி, கலீல் அகமது, நாதன் எல்லிஸ், நூர் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இம்பேக்ட் ஆட்டக்காரர்களாக அன்ஷுல் கம்போஜ், கார்த்திக் சர்மா, ஸ்ரேயாஸ் கோபால் அல்லது சர்ப்ராஸ் கானை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் அஷ்வின்.
சர்பராஸ் கானை சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்தாலும், டாப் ஆர்டர் நிரம்பியுள்ளதால் அவர் இம்பாக்ட் பிளேயராக வர வாய்ப்புள்ளதாக அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.


