Last Updated:
மிட்செல்லா பென்தாஸ், ஜெர்மனி பெண் பொறியாளர், ப்ளு ஆர்ஜின் ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்ற முதல் வீல் சேர் பயனர் என்ற பெருமை பெற்றார்.
விண்வெளிக்கு சென்ற முதல் வீல் சேர் பயன்படுத்தும் நபர் என்ற பெருமையை ஜெர்மனி பெண் பொறியாளர் மிட்செல்லா பென்தாஸ் பெற்றுள்ளார்.
ஜெஃப் பெசாஸின் ப்ளு ஆர்ஜின் ராக்கெட்டின் 37வது பயணத்தில் 6 பேர் பயணித்தனர். அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விபத்தில் கால்களின் செயல்பாட்டை இழந்த மிட்செல்லா உட்பட 6 பேர் பயணித்தனர்.
விண்வெளி அனைவருக்கும் சொந்தமானது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மிட்செல்லாவின் பயணம் அமைந்தது. சில நிமிட விண்வெளிப்பயணத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பாலைவனத்தில் பாதுகாப்பாக பாராச்சூட் மூலம் அவர்கள் தரையிறங்கினர்.
ஐரோப்பிய விண்வெளி மையத்தில் பொறியாளராக மிட்செல்லா பணியாற்றி வருகிறார். யாரும் கனவு காண்பதை நிறுத்தக்கூடாது என்பதற்கு தானே ஒரு உதாரணம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


