Last Updated:
தற்போது மும்பை அணியின் கேப்டனாக விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷர்துல் தாகூர் ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஷர்துல் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்கள் சிறிய ரகசியம் இதோ வந்துவிட்டது. 9 மாதங்களாக நாங்கள் ரகசியமாக வைத்திருந்த கனவு இது. உங்களை வரவேற்கிறோம் குட்டிப் பையன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
ஷர்துல் தாகூரின் மனைவி மிதாலி பருல்கர். இவர் ஒரு தொழில்முறை பேக்கர் (Baker) மற்றும் ‘All Jazz Luxury Bakes’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் நவம்பர் 2021-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர், பிப்ரவரி 28, 2023 அன்று கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்திருப்பது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
போட்டிகளை பொருத்தளவில் வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக ஷர்துல் தாகூர் சமீபத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார்.


