இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளம் படை பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்று இந்திய அணி பந்துவீசிய நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.


