Last Updated:
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி மற்றும் 1 போட்டியில் டிரா செய்திருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது.
ஆஷஸ் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 100% வெற்றிப் புள்ளிகளுடன் (PCT) முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியதன் மூலம், 75% புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா 66.67% புள்ளிகளுடன் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் அணி 50% புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அண்மையில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றதால், இந்தியாவை விட பாகிஸ்தான் ஒரு படி மேலே உள்ளது.
இந்திய அணி 48.15% புள்ளிகளுடன் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணியின் இந்த செயல்பாடு ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி மற்றும் 1 போட்டியில் டிரா செய்திருக்கிறது.


