அடுத்த பௌர்ணமி தினத்தில் தையிட்டி விகாரையில் புதியதொரு புத்தர் சிலை நிறுவப்படவுள்ள நிலையில் இது ஒரு சட்டவிரோத விகாரை என பிரதேசசபை பதாகையை வைக்க முற்பட்ட நிலையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டதுடன் அங்கு பதற்றங்களும் காவல்துறையின் அடாவடிகளும் இடம்பெற்றன.
நாளையதினம் இந்திய வெளியுறவுச்செயலர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் இந்த தையிட்டி போராட்டம் கவனம் பெற்றுள்ளது.
அத்துடன் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் சாவோ லெஜி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை கொழும்பிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவரின் பயணத்திற்கு முன்னர் இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை வருகை முக்கியத்துவம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
இது உட்பட பல்வேறு விடயங்களை அலசி ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

