Last Updated:
ஏஐ தொழில்நுட்பத்தின் தலைமையாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் தலைமையாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மும்பையில் நடந்த “More from Less for More : Innovation’s Holy Grail” என்ற புத்தக்க வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அம்பானி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு என்ற புதிய சகாப்தத்தில் உலகம் நுழைந்துள்ளதாகவும், ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் தலைவராக மாற வேண்டும் எனவும் கூறினார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் எரிபொருள் தேவைக்கு வரமாக சூரியசக்தி அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
#WATCH | Mumbai: Chairman & MD of Reliance Industries Limited, Mukesh Ambani says, “…We are at the doorsteps of solving local energy, of not using solar only as a four-hour fuel. We can use solar to really solve some of the problems that India has to solve for a long time…we… https://t.co/PefmFhjYrR pic.twitter.com/47IhCXczMy
— ANI (@ANI) December 20, 2025
புதிய இந்தியா இளம் திறமையாளர்களாக நிரம்பி உள்ளதாக கூறிய முகேஷ் அம்பானி, அவர்களின் லட்சக்கணக்கான கனவுகள் மெய்யாகும் சூழல் உருவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். அறிவியல் மற்றும் வணிக உலகிற்கு இடையே ஒரு வலுவான பாலத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியா தொழில்நுட்ப வல்லரசாக மாற முடியும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மேலும், “எனது தந்தை திருபாய் அம்பானி இந்தியாவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ரிலையன்ஸை நிறுவினார். இந்தியாவும் இந்தியர்களும் முன்னேற வேண்டும் என்பது தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நோக்கம். இன்று நாம் ஒரு புதிய இந்தியாவில் இருக்கிறோம். இந்த புதிய இந்தியா கனவு காணும் ஏராளமான இளைஞர்களால் நிறைந்துள்ளது. லட்சக்கணக்கான கனவுகள் இந்தியாவில் நனவாகி வருகின்றன” என்றார்.


