புத்ராஜெயா:
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழல் குறித்து விவாதிக்க, ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைமை நாடான மலேசியா சிறப்புக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
நாளை (டிசம்பர் 22, திங்கட்கிழமை), கோலாலம்பூர், மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் தலைமையில், மலேசியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் சிறப்புக் கூட்டம், ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு முக்கியத் தளமாக அமையும்.
The post தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பதற்றம்: மலேசியாவில் நாளை ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

