Last Updated:
348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் இறுதிப் போட்டி இன்று நடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 9 சிக்சருடன் 172 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அகமது உசைன் 56 ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 347 ரன்கள் குவித்தது.
இந்திய பவுலர்கள் தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளையும், கிலன் படேல், ஹெனில் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 10 பந்துகளில் 3 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஆயுஷ் மாத்ரே 2 ரன்களும், ஆரோன் ஜார்ஜ் 16 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்தவர்களில் தீபேஷ் தேவேந்திரன் 36 ரன்களும், கிலன் படேல் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.


