திருப்பதி:ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி அடுத்த ராவ் பள்ளியை சேர்ந்தவர் சிம்மாசலம் (வயது 25). இவரது மனைவி பவானி (19). இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
சிம்மாசலம் உள்ள ஜகத்கிரி குட்டாவில் தங்கியிருந்து ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.
கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்தனர். ரெயில் புவனகிரி அடுத்த வாங்க பள்ளி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.
அப்போது எதிர்பாராத விதமாக கணவன், மனைவி இருவரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆந்திராவில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து புதுமண தம்பதி மரணம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

