Last Updated:
MGNREGA சட்டத்தை மாற்றி மத்திய அரசு VB G RAM G மசோதா கொண்டுவந்திருப்பதன் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மீது புல்டோசர் கொண்டு பாஜக தாக்கியுள்ளதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) கட்டமைப்பை விவாதமோ, ஆலோசனையோ இல்லாமல் தன்னிச்சையாக பாஜக அரசு மாற்றியது. அரசு தற்போது, அந்தத் திட்டத்தின் மீது புல்டோசரை வைத்து தாக்கியுள்ளது” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான விபி ஜி ராம் ஜி எனப்படும், வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது; “20 வருடங்களுக்கு முன்பாக டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இது எளியவர்களுக்கும் வேலையைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது. அதுமட்டுமின்றி, அதன்மூலம் கிராமங்களை வலிமையாக்கியது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மூலம், மகாத்மா காந்தியின் கனவுகளை நோக்கி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் குறிப்பாக கொரோனா காலத்திலும் ஏழைகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்த மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
भाईयों और बहनों.. नमस्कार
मुझे आज भी याद है, 20 साल पहले डॉ. मनमोहन सिंह जी प्रधानमंत्री थे, तब संसद में मनरेगा कानून आम राय से पास किया गया था। यह ऐसा क्रांतिकारी कदम था, जिसका फायदा करोड़ों ग्रामीण परिवारों को मिला था। खासतौर पर वंचित, शोषित, गरीब और अतिगरीब लोगों के लिए… pic.twitter.com/BU8qvcBJyp
— Congress (@INCIndia) December 20, 2025
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கட்டமைப்பை விவாதமோ, ஆலோசனையோ இல்லாமல் தன்னிச்சையாக பாஜக அரசு மாற்றியது. அரசு தற்போது, அந்தத் திட்டத்தின் மீது புல்டோசரை வைத்து தாக்கியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்துவதில் காங்கிரஸ் பெரும் பங்களிப்பைச் செய்தது. இதன் மூலம் மோடி அரசு ஏழைகளின் நலன்களைத் தாக்கியுள்ளது. இந்தச் சட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம், மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் நலன்களைத் துன்புறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


