Last Updated:
கவுகாத்தி விமான நிலையம் 4 ஆயிரம் கோடியில் நவீனமாக கட்டப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
இயற்கை கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கவுகாத்தி விமான நிலையத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் சர்வதேச விமான முனையம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த விமான முனையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த விமான நிலையத்திற்கு அசாமின் முதல் முதலமைச்சரான லோக்பிரிய கோபிநாத் பர்டோலியின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், விமான நிலையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள அவரது 80 அடி உயர சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அசாம் மாநில வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். முந்தைய காங்கிரஸ் அரசு தனது வாக்கு வங்கிக்காக அசாம், மேற்குவங்க மாநிலங்களில் ஊடுருவல்காரர்களை அனுமதித்ததாகவும், அவர்கள் நிலங்களை அபகரித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் தேசவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மாநிலத்தின் வளங்களை மீட்க அசாம் அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.


