Last Updated:
டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கேப்டன், அக்ஷர் படேல் துணை கேப்டன். வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டனாக அக்ஷர் படேல் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த வருடம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி விளையாடும் என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் அறிவித்தார். துணை கேப்டனாக அக்ஷர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் சொதப்பிய சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடரில் சதம் விளாசிய யாஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அதே சமயம் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்ததி அணியில் இடம்பிடித்துள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் பும்ரா மற்றும் ஹர்ஸ்தீப் சிங் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர்களில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷானுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்ஷர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்புரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஸ்திப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்)


