Last Updated:
சஞ்சு சாம்சன் 37 ரன்களும், அபிஷேக் சர்மா 34 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தனர்
அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5 ஆவது டி20 யில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 73 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் எடுத்திருந்தனர்.
தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 37 ரன்களும், அபிஷேக் சர்மா 34 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தனர்.
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் குவின்டன் டி காக் 35 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். டெவால்ட் ப்ரெவிஸ் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இருவரும் ஆட்டமிழந்த பின்னர் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்த வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர். டேவிட் மில்லர் 18 ரன்களும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவர்களில் ஜார்ஜ் லிண்டே 16 ரன்களும், மார்கோ ஜான்சென் 14 ரன்களும் அதிரடியாக சேர்த்து இந்திய அணியின் ரசிகர்களுக்கு லேசான அதிர்ச்சியை கொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Dec 19, 2025 11:04 PM IST


