Last Updated:
1980கள் வரை தொற்று நோய்களாலும், அதன் பின் தொற்று அல்லாத நோய்களாலும் சூழப்பட்டிருந்த இந்தியா, தற்போது இரண்டாலும் சூழப்பட்டுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக புற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கும் நாடாக இருக்கிறது இந்தியா. இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 2040-ம் ஆண்டில் 2 மில்லியன் என உயரும் என்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தவற்றின் விவரம் இங்கே: “பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்புக்காக HPV தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. அது மலிவு விலையிலேயோ இலவசமாகவோ மக்களுக்கு கிடைக்க அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி புற்றுநோயாளிகள் உருவாகின்றனர்.
ஜிதேந்தர் சிங்
இந்தியாவில் தற்போது சுமார் 15 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2040-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 2 மில்லியனாக (20 லட்சம்) உயருமென கணிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றங்கள், வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக இந்த நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. 1980-கள் வரை தொற்று நோய்களாலும், அதன் பின் தொற்று அல்லாத நோய்களாலும் சூழப்பட்டிருந்த இந்தியா, தற்போது இரண்டாலும் சூழப்பட்டுள்ளது. மாரடைப்பு, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் இளைஞர்களுக்கும் வருவதால் விழிப்புணர்வு அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. சிகிச்சையைப் பொறுத்தவரை, நாட்டின் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் புற்றுநோய் வசதிகளை வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது


