Last Updated:
உயிரிழந்த மாணவர் அமைப்பு தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாதியின் உடல் இன்று மாலைக்குள் வங்கதேசத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச மாணவர் சங்க தலைவர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்தது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் முக்கிய தலைவராக செயல்பட்டவர் ஷெரிப் உஸ்மான் ஹாதி. இவர் சமீபத்தில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் மூளைச்சாவடைந்து உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்தது. டாக்கா, சட்டோகிராம் உள்ளிட்ட நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜ்ஷாஹி பகுதியில் உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
டாகாவில் உள்ள பிரோதோம் அலோ, டெய்லி ஸ்டார் ஆகிய செய்தி தாள் நிறுவன அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அந்த நிறுவனங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நியூ ஏஜ் என்ற செய்தி தாளின் ஆசிரியர் நுருல் கபீர் என்பரை போராட்டக்காரர்கள் தாக்கினர். டாகாவில் உள்ள ஷாபாக் பகுதியில் போராட்டக்காரர்கள் சாலைகளை முற்றுகையிட்டனர். 200க்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவர் அமைப்பு தலைவரின் உடல் இன்று மாலைக்குள் வங்கதேசத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


