பாமாயில்… 2025 நவம்பரில் பாமாயில் இறக்குமதி அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 5% அதிகரித்து 6,32,341 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளதாக சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEA) தெரிவித்துள்ளது. சோயா எண்ணெய்… சோயா எண்ணெய் இறக்குமதி 18%க்கும் மேல் குறைந்து 3,70,661 டன்களாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 45% குறைந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (1,42,953 டன்கள்) குறைந்துள்ளது. மற்ற எண்ணெய்களை பொறுத்த வரையில், அதே மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) இருந்து 5,000 டன் கனோலா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.


