Last Updated:
அரசு அமைத்த குழுவின் விசாரணை அடிப்படையில் மருத்துவர், ஆய்வக ஊழியர்கள் என மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் எச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை குழந்தைகளுக்கு ஏற்றியது தொடர்பாக மருத்துவர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சாத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் தலசீமியா என்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் 6 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டது தெரியவந்தது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அந்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அந்த குழுவின் விசாரணை அடிப்படையில், ரத்தம் வழங்கிய ஆய்வகத்தில் பணியாற்றும் மருத்துவர் தேவேந்திர படேல், ஆய்வக ஊழியர்கள் ராம் பாய் திரிபாதி, நந்தேல் பாண்டே ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க சுகாதார மற்றும் மருத்துவ தலைமை அதிகாரி மனோஜ் சுக்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு மையங்களில் இருந்து ரத்தம் கொண்டு வரப்பட்டு ஏற்றப்பட்டதாக தெரிகிறது. எனவே ரத்த தானம் செய்தவர்களில் யாருடைய ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந்தது என்பது குறித்து கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
6 குழந்தைகளுக்கு HIV தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம்: மூவர் சஸ்பெண்ட்… ஆனாலும் தொடரும் சிக்கல்!


