சிங்கப்பூரின் பிரபல கலாம் உணவகம் இடமாற்றம் செய்யப்பட்டு பிரம்மாண்டமான முறையில் மீண்டும் திறப்பு விழா காணவுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சுவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை வழங்கி வந்த கலாம் உணவகம் லிட்டில் இந்தியாவின் NO 2 வீரசாமி சாலையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் திறப்பு விழா காணுகிறது.
சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி அவசியம் – CDA
டிச.21 ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு கோலாகலமாக திறக்கப்படவுள்ளதாக உணவகம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு திறக்கப்பட்ட கலாம் உணவகம், இதற்கு முன்னர் 199 கிச்சனர் சாலையில் இயங்கி வந்தது.
திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புதிய உணவகத்தின் சிறப்பாக சுமார் 100 பேர் அமரும் மண்டபம் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குடும்ப விழாக்கள் அல்லது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றை சிறப்பாக கொண்டாடவும் முடியும்.
மேலும் நல்ல அமைதியான சூழலுடன் கூடிய சிறிய தோட்டமும் அங்கு அமைந்துள்ளது.
இந்திய சமூகம் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடி… 2.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல் – 5 பேர் கைது

