ஆனால், தற்போதைய நகர்வுகள் அனைத்தும் தோனியின் ஓய்வை நோக்கி செல்வதை உறுதிப்படுத்துகின்றன. ஐபிஎல் 2026 மினி ஏலத்தின் போது, ஜியோஸ்டாரின் நேரடி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, இது தோனியின் கடைசி சீசன் என்று நம்புவதாக தெரிவித்தார். மேலும், எல்லா அறிகுறிகளும் இதை நோக்கியே இருப்பதாகவும், இந்த முறை தோனி விடுப்பு எடுக்க முழுமையாக தயாராக இருப்பதாகவும் உத்தப்பா கூறினார்.


