
மெய்யன்
பேரனர்த்தத்தின் போது பாரிய நில வெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி- வத்தேகம- கபரகல வீதி பின்னர் போக்குவரத்திற்காக புதன்கிழமை (17) அன்று திறக்க பட்டிருந்த போதும் கடும் மழை கொட்டித் தீர்ப்பதால் மீண்டும் வியாழக்கிழமை (18) மூடப்பட்டுள்ளது.
கெவும் போக் எனப்படும் பிரதேசத்திலுள்ள வீதி மீண்டும் தாழிறங்கும் அபாயம் காரணமாக வீதி மீண்டும் மூடப்பட்டது.
இதன் காரணமாக வத்தேகம -கபரகல மற்றும் வத்தேகம ஊடாக – கோமரை,பம்பரல்லை,பெத்தேகம போன்ற பிரதேசங்களுக்கான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாற்று வழிப்பாதைகளை போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்துகிறது.
மலையகத்தின் பன்விலை, கபரகல, மாத்தளை, மடவலை, கோமரை மற்றும் மடுல்கலை போன்ற பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருகிறது இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.




