Last Updated:
இந்த நிகழ்வில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர், கருப்பு நிறத்தில் க்ளாசிக்கான ஆடை அணிந்திருந்தது, கவனத்தை ஈர்த்தது.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, தனது GOAT டூர் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் பல பகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 13) முதல் திங்கட்கிழமை (டிசம்பர் 15) வரை பயணித்தார். இப்பயணத்தில் மும்பை, கொல்கத்தா, டெல்லி சென்ற மெஸ்ஸி தொடர்ந்து கடந்த டிசம்பர் 15ஆம் தேதி குஜராத்தின் ஜாம்நகருக்கு சென்றார்.
அங்கு கால்பந்து உலகக்கோப்பை சாம்பியனான மெஸ்ஸிக்கு, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்து வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு மையத்தைச் சுற்றிக்காட்டினர். இவற்றைத் தொடர்ந்து மெஸ்ஸி மற்றும் அவருடன் இந்தியா வந்துள்ள அவரது இண்டர் மியாமி அணியினரான லூயிஸ் ஸ்வரேஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோருக்கு பாரம்பரிய நாட்டுப்புற இசை இசைக்கப்பட்டும், பூ மழை தூவப்பட்டும், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், ஆரத்தி எடுக்கப்பட்டும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவர்கள் அனைவருடனும் சேர்ந்து ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் வந்தாராவிலுள்ள அம்பே மாதா எனப்படும் துர்கை அம்மனுக்கான பூஜைகள், கணேஷ் பூஜை, ஹனுமன் பூஜை, சிவ அபிஷேகம் போன்ற பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்துகொண்டு இறைவனை தரிசித்தனர். இதையடுத்து அனைவரும் வனவிலங்கு பாதுகாப்பு மையத்தைச் சுற்றிப்பார்த்து, அங்கிருந்த விலங்கு பராமரிப்பாளர்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடினர். வந்தாராவின் சுற்றுச்சூழல் அழகை நடந்தபடியே அனைவரும் ரசித்து சென்றனர்.
இந்த நிகழ்வில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர், கருப்பு நிறத்தில் க்ளாசிக்கான ஆடை அணிந்திருந்தது, கவனத்தை ஈர்த்தது. இதில் ராதிகா, எளிமையான மற்றும் நேர்த்தியான ஒரு டாப் மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். முழுக்க முழுக்க கருப்பு நிறத்திலான இந்த உடையில், டாப் முழுக்கை நீளத்திலும், பேண்ட் கணுக்கால் வரையிலும் இருந்தது. கழுத்தும், முழுமையாக கவர் ஆகும்படியான டாப் அணிந்திருந்தார் ராதிகா. இத்துடன் மினிமலிஸ்ட்டான ஒரு லுக்கில், சிறியதான ஒரு தோடு, மோதிரம், இயற்கையான மற்றும் லேசான மேக்-அப் என்றிருந்தார்.

அதேபோல ஆனந்த் அம்பானியும் சிம்பிளாக ஒரு கருப்பு நிற ஷர்வானியில் இருந்தார். அவரது ஷர்வானியின் மீதான ஜாக்கெட் பந்த்கலா காலர் வடிவமைப்புடனும், தோள்பட்டை பகுதியில் Pad வேலைப்பாடும், ஆர்னேட் பட்டன்களும் பொறுத்தப்பட்டு, ஒரு பட்டு பாக்கெட்டும் வைக்கப்பட்டிருந்தது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் இந்த மினிமலிஸ்ட் லுக், தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
December 18, 2025 10:55 AM IST


