ராஞ்சி,ஜார்க்கண்ட் மாநிலத்தில் யானை தாக்கி நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் ராம்கட் மாவட்டத்தில் உள்ள சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், அம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மதியம் யானைகளை வீடியோ, செல்பி எடுக்க முயன்ற அமித் குமார் (வயது 32) என்ற இளைஞரை யானை மிதித்துக்கொன்றது.
இதையடுத்து, ராஞ்சி மாவட்டம் ஜிண்டு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி 36 வயது நபர் உயிரிழந்தார். இதன் மூலம் ஜார்க்கண்ட்டில் நேற்று ஒரேநாளில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.




