கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ள புதிய அமைச்சரவை மாற்றங்கள், நாட்டின் நலனை விட அரசியல் அழுத்தங்களையும், கட்சிகளுக்கு இடையிலான சமரசங்களையும் அடிப்படையாகக் கொண்டவை எனப் பாஸ் (PAS) கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் கூறுகையில், புதிய அமைச்சரவையில் டிஏபி (DAP) கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்:
மேலும் ஹன்னா யோவ் (கூட்டரசு பிரதேச அமைச்சர்), லோ சு ஃபூய் (துணை அமைச்சர்) மற்றும் போக்குவரத்து, வீடமைப்புத் துறைகளில் டிஏபி தலைவர்கள் நீடிப்பது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.
“நகரங்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களிடமோ அல்லது ஒரு கட்சியிடமோ ஒப்படைப்பது, நாட்டின் ஆட்சி முறையில் சமமின்மையை உருவாக்கும். இது நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளது,” என அவர் கூறினார்.
இந்த மாற்றங்கள் திறமையின் (Merit) அடிப்படையில் நடக்காமல், அரசியல் கைமாறாகச் செய்யப்பட்டுள்ளதாக அவர் கடுமையாக சாடினார்.




