சிங்கப்பூரில் பலத்த மழையிலும், சிக்கூ (Chiku) சாலையில் தீ சம்பவம் ஏற்பட்டது.
கடந்த டிச.14 அன்று அதிகாலை 4 மணியளவில், மூன்று மாடி வீட்டில் தீ பற்றியதாக அவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.
சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடி… 2.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல் – 5 பேர் கைது
அதில் ஒருவர் புகையை உள்ளிழுத்த காரணத்தால், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பக்கத்துக்கு வீடுகளில் இருந்து சுமார் 20 பேர் காவல்துறையினராலும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினராலும் வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு நடவடிக்கையில், மொத்தம் 7 ஜெட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
பின்னர் அன்று காலை சுமார் 6:45 மணிக்குத் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.
கிளாஸ் 3, 3A ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இனி LGV, சிறிய பேருந்துகள் ஓட்டலாம்

