கோலாலம்பூர்:
PKR இளைஞர் அணி தலைவர் ஆடம் அட்லி, மலாக்கா PKR மாநிலத் தலைமை கவுன்சிலின் தற்காலிகத் தலைவராக டிசம்பர் 16 முதல் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர், டத்தோ டாக்டர் புஸியா சாலே, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சராகவும் இருக்கும் ஆடம் அட்லி, தொழிலதிபர் ஆல்பர்ட் டீ என்பவருடன் தொடர்புடைய ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளை தற்போது எதிர்கொண்டுள்ள டத்தோ Seri Shamsul Iskandar Mohd Akin-யிற்கு பதிலாக இன்று பதவியேற்கிறார்.
நீண்டகால PKR உறுப்பினரான Shamsul Iskandar, மலாக்கா PKR தலைவர் மற்றும் ஹாங் துவா ஜெயா பிரிவு தலைவராகப் பணியாற்றினார்.
அதேநேரம் பிரதமர் டத்தோ Seri Anwar Ibrahim-மின் முன்னாள் அரசியல் செயலாளராகவும் இருந்த 51 வயதுடைய இவர், தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
டிசம்பர் 4 அன்று, தொழிலதிபர் ஆல்பர்ட் டீ-யிடமிருந்து RM176,829.03 இலஞ்சத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு Shamsul Iskandar நிரபராதி என்று வாதிட்டார்.
டிசம்பர் 5 அன்று, 2023-ல் ஆல்பர்ட் டீ-யிடமிருந்து RM64,924 இலஞ்சம் கோரிய மற்றொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் அவர் நிரபராதி என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




