Last Updated:
டிரம்ப் உரையை திரித்ததாக குற்றம் சாட்டி, பிபிசி மீது 91 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது உரையை திரித்து வெளியிட்ட விவகாரத்தில் பிபிசி நிறுவனத்திடம் 91 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கலவரத்தில் டொனால்ட் டிரம்ப் பேசியதை ஆவணப்படமாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், டிரம்ப்பின் உரையில் இரண்டு இடங்களை வெட்டி ஒட்டி கலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேசியதாக தவறாக சித்தரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகரம் அடைந்த நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்தின் இயக்குநர் டிம் டேவி, செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிபிசி செய்தி நிறுவனம் மன்னிப்பு கோரியது.
இந்நிலையில், தனது உரையை திரித்து வெளியிட்ட விவகாரத்தில் பிபிசி நிறுவனத்திடம் இந்திய மதிப்பில் 91 ஆயிரம் கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார். பிபிசிக்கு எதிராக மொத்தம் 33 பக்கங்கள் அடங்கிய மனுவை டிரம்ப் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
December 16, 2025 3:12 PM IST
பிபிசி நிறுவனத்திடம் ரூ.91 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. என்ன காரணம் தெரியுமா?


