Last Updated:
கில்லுடன் நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அவர் எந்த அணிக்கு எதிராகவும் எந்த சூழ்நிலையிலும் ரன்கள் எடுக்க முடியும்
மோசமான ஃபார்மில் இருக்கும் 2 வீரர்களை குறிப்பிட்டு, அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுப்பார்கள் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஒரு நாள் போட்டி தொடரை இழந்தது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில்லின் ஆட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களம் இறக்கி இருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது பற்றி அபிஷேக் சர்மா கூறுகையில், “கில் மற்றும் சூரியகுமார் மீது அதிக நம்பிக்கை வைக்கலாம். இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பார்கள்.
December 15, 2025 5:55 PM IST


