உலகின் மற்ற சந்தைகளை விட, இந்தியாவின் Smartphone சந்தை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இன்றைய Premium வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது வெறும் விலையுயர்ந்த போன்களை மட்டுமல்ல; அவர்கள் வாழ்றமுறை, வேலை, பயணம், பொழுதுபோக்கு, பரிவர்த்தனை மற்றும் படைப்பாற்றலுக்கும் ஈடுகொடுக்கும் ஒரு சிறந்த சாதனத்தைத் தேடுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு இப்போது மிகத் தெளிவாக உள்ளது: கலவையான ஒளிச்சூழலிலும் துல்லியமான புகைப்படங்கள், எவ்வளவு பயன்படுத்தினாலும் வேகம் குறையாத அசாத்திய செயல்திறன், நேரத்தை மிச்சப்படுத்தும் அறிவார்ந்த AI, நாள் முழுதும் உழைக்கும், வருடங்கள் கடந்தும் கைவிடாத நீடித்த பேட்டரி.
இந்த மாற்றத்தை புள்ளிவிவரங்களும் ஆணித்தரமாக உறுதிப்படுத்துகின்றன. IDC-யின் Q3 2025 அறிக்கையின்படி, Premium மற்றும் Super-premium பிரிவுகள் ஆண்டுக்கு ஆண்டு 40%-க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இதே காலாண்டில் 13.9% சந்தைப் பங்குடன் OPPO 2-ம் இடத்தைப் பிடித்திருப்பது, வெறும் ‘Spec-sheet’ எண்களைத் தாண்டி, உண்மையான பயனர் அனுபவத்தை வழங்கும் பிராண்டுகளை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்குச் சிறந்த சான்றாக அமைகிறது. இதற்குக் காரணம், OPPO-வின் வெற்றி ஃபார்முலா யதார்த்தத்துடன் இணைந்திருப்பதே! சராசரி கணக்கீடுகளோ, வெறும் ஆய்வகச் சோதனைகளோ அல்ல; இந்தியர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை உண்மையில் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டே Find X9 உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்காக மட்டுமல்ல, இந்தியாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உத்தி OPPO-வை பொறுத்தவரை, இந்தியா என்பது விற்பனைக்கான ஒரு பெரிய சந்தை மட்டுமல்ல; அது நிறுவனத்தின் எதிர்காலத் திசையைத் தீர்மானிக்கும் ஒரு வழிகாட்டி. பெரும்பாலான உலகளாவிய சந்தைகளை விட, இங்குள்ள பயனர்கள் தங்கள் சாதனங்களை அதிகப்படியான மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்துகிறார்கள். ஒரே நாளில், ஏன் பெரும்பாலான சமயங்களில் ஒரே நேரத்தில் – UPI பணப்பரிவர்த்தனை, OTT ஸ்ட்ரீமிங், Short-form வீடியோக்கள், இடைவிடாத கேமிங், இரவு நேரக் கொண்டாட்டங்கள், பயணத்தின்போது புகைப்படம் எடுத்தல், முக்கியமான அலுவலக அழைப்புகள் மற்றும் AI சார்ந்த பணிகள் என அனைத்தையும் நம் இந்தியப் பயனர்களின் ஒரே போன் தான் கையாளவேண்டியுள்ளது.
நம்மில் யாருக்குத்தான் இந்த அனுபவம் இல்லை? பயணத்தின் போதே ஒரு முக்கியமான அலுவலக அழைப்பை முடித்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் OPPO-வின் AI Recorder மற்றும் AI Writer உதவியுடன் மீட்டிங் குறிப்புகளை அனுப்பாதவர் யார்? அல்லது அவசரமாகப் படம் பிடிக்கும்போதும் Hasselblad கேமராக்கள் வழங்கும் அந்தத் துல்லியத்தையும், நிறங்களின் சமநிலையும் கண்டு வியக்காதவர் யார்? இரவு முழுவதும் நண்பர்களுடன் Gaming மற்றும் அரட்டையில் மூழ்காதவர் யார்? அல்லது தொழில்முறை நிபுணர்களுக்கு இணையாக, நமது வீடியோக்களையும் புகைப்படங்களையும் மெருகேற்றிக் கொடுக்கும் OPPO-வின் AI கருவிகளால், நாமே சிறந்த “Storyteller”-ஆக மாறியத் தருணங்கள் எத்தனை? இந்தத் தருணங்களுக்குப் பின்னால் ஒரு எளிய உண்மை உள்ளது: பலவீனமான இமேஜிங் (Camera), சுமாரான செயல்திறன் அல்லது நம்பகத்தன்மையற்ற மென்பொருள் இருந்தால், இந்தியப் பயனர்களின் தீவிரமான பயன்பாட்டு முறையில் அது அப்பட்டமாகத் தெரிந்துவிடும்.
திருவிழாக்கள் மற்றும் வண்ணமயமான குடும்பக் கொண்டாட்டங்கள், கூட்டம் நிரம்பி வழியும் இசைக் கச்சேரிகள், அவசரப் பயணங்கள் மற்றும் கடுமையான பகல் வெளிச்சம், Neon விளக்குகள் நிறைந்த இடங்கள் மற்றும் இடநெருக்கடி மிகுந்த உள்ளரங்குகள். இவை அனைத்தும் இந்தியாவிற்கே உரித்தான பிரத்யேகமான புகைப்பட சவால்கள் ஆகும். அதேபோல், நீண்ட தூரப் பயணங்கள், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்தல் மற்றும் தீவிரமான கேமிங் அமர்வுகள், இவை ஆய்வகச் சோதனைகளை விட பேட்டரி மற்றும் வெப்பக் கட்டுப்பாட்டை அதிகம் சோதிக்கின்றன. இவை அரிதான சூழல்கள் அல்ல; ஒரு Flagship போனிடம் இந்தியர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தீர்மானிக்கும் அன்றாடச் சவால்கள் இவை. OPPO-வின் தயாரிப்புத் திட்டங்கள் இந்த எதார்த்தத்தையே பிரதிபலிக்கின்றன. ஆரம்பநிலை மாடல்கள் முதல் Flagshipகள் வரை, நிறுவனத்தின் இந்திய உத்தி மூன்று.
அனைத்து விலைப் புள்ளிகளிலும் அர்த்தமுள்ள புதுமை, காலம் கடந்தும் ஈர்க்கும் உயர்தர வடிவமைப்பு, அடிக்கடி மாற்ற வேண்டியத் தேவையைக் குறைக்கும் நீண்ட ஆயுள். இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது ColorOS—இது பல வருட பயன்பாட்டிற்குப் பிறகும் போன் புதிது போலவே இயங்குவதை உறுதி செய்கிறது. மக்கள் விரும்புவது நீண்ட காலம் உழைக்கும், பார்ப்பதற்கு அழகாக இருக்கும், மற்றும் எத்தகைய பணிச்சுமையிலும் கைவிடாத நம்பகமான சாதனங்களைத்தான். அத்தகைய சாதனங்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் பட்சத்தில், அதற்கான விலையைக் கொடுக்கவும் இந்திய வாடிக்கையாளர்கள் தயாராகவே உள்ளனர்.
இந்தியாவின் Flagship சந்தை: ஒரு முழுமையான போனுக்கான தேடல்.
சந்தையில் தேவை என்னவோ அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, ஆனால் இந்தியாவில் உண்மையான Flagship என்று சொல்லிக்கொள்ளும் விருப்பங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. சந்தையில் இருக்கும் பல போன்கள் ஒன்றில் சிறந்த செயல்திறனை வழங்குகின்றன, அல்லது சிறந்த கேமராவைத் தருகின்றன, அல்லது சிறந்த டிசைனைப் பெற்றுள்ளன. ஆனால், எந்தவித சமரசமும் இன்றி இவை அனைத்தையும் ஒன்றாக வழங்கும் சாதனங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன.
சரியாக இந்த இடைவெளியைத் தான் OPPO குறிவைக்கிறது. Find X8-ன் வெற்றிக்குப் பிறகு, OPPO தனது Premium வியூகத்தை மேலும் துரிதப்படுத்தியுள்ளது. இமேஜிங் தொழில்நுட்பத்தில் இன்னும் ஆழமான முதலீடு, பார்த்தவுடனே கவரும் வடிவமைப்பு நேர்த்தி,
அமைப்பு முழுவதிலும் AI-யின் வேகமான செயல்பாடு. இன்று உலகளவில் 740 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள்—குறிப்பாக இந்தியாவில் மட்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள OPPO, தனது இந்தப் பரந்த வாடிக்கையாளர் வட்டத்தைப் பயன்படுத்தி, நமது ஊர் ரசனைக்கும், நமது யதார்த்த வாழ்க்கை முறைக்கும் ஏற்ற Flagship போன்களைச் செதுக்குகிறது. இந்தச் சிந்தனையின் மிகத் தெளிவான, முழுமையான வடிவமே Find X Series.
OPPO-வின் லட்சியமிக்க கனவுகள் சோதனைக்கு களமாக எப்போதும் Find X Series இருந்து வருகிறது. இந்தியாவில், OPPO Find X8-ன் வருகைக்குப் பிறகு இந்தப் பாதை இன்னும் துல்லியமானது. அதன் கச்சிதமான வடிவமைப்பு, ஈடுஇணையற்ற இமேஜிங் தரம், மிரட்டும் பேட்டரி திறன் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனுக்காக அது பெற்ற பாராட்டுக்கள் ஏராளம். அதற்கு கிடைத்த அந்த அபாரமான வரவேற்பு, OPPO ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு உண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியது: “உண்மையான Flagship புதுமைகளுக்காக இந்தியா காட்டும் ஆர்வம் முன்னெப்போதையும் விட இப்போது ஆழமாகவும், நம்பிக்கையுடனும் உள்ளது.”
OPPO Find X9 Series அந்த வேகத்தை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது. இந்தியப் பயன்பாட்டு முறைகளால் நேரடியாக வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் – மேம்படுத்தப்பட்ட இமேஜிங், நிலையான செயல்திறன், நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் படைப்பாளிகளுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட AI கருவிகளுடன் Find தளத்தை இது பலப்படுத்துகிறது.

இது இந்தியாவை வெறும் ஒரு முக்கிய சந்தையாக மட்டும் பார்க்காமல், உத்வேகத்தின் மையமாகவும் பார்க்கும் OPPO-வின் பரந்த பார்வையையும் பிரதிபலிக்கிறது. Hasselblad-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட முழுமையான Flagship அனுபவம், Premium வடிவமைப்பு மற்றும் இந்தியா படம் பிடிக்கும், வேலை செய்யும் மற்றும் கதைகளைச் சொல்லும் விதத்திற்கு ஆதரவளிக்கும் AI ஆகியவற்றைக் கொண்டு Find X9 Series அந்தத் தத்துவத்தை நடைமுறைக்குக் கொண்டுவருகிறது. இது இந்தியாவின் படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்தால் உருவான புதுமை மற்றும் OPPO இப்பதான் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
கேமரா: இந்தியாவின் ஒளி, நிறம் மற்றும் அசைவுகளுக்கு உயிர் கொடுக்கும் ஒரு Flagship.
இமேஜிங் (Imaging) தொழில்நுட்பத்தில் OPPO எடுத்து வைத்துள்ள மிகத் தீர்க்கமான, முன்னோக்கிய அடிதான் இந்த Find X9 Series. இது வெறும் ‘Megapixel’ எண்ணிக்கையைத் துரத்தும் பந்தயம் அல்ல; Optics, AI மற்றும் கணக்கீடு ஆகிய மூன்றும் எவ்வாறு கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என்பதை மறுவரையறை செய்யும் முயற்சி.
இதன் மையப்புள்ளியாக விளங்குவது Hasselblad Master Camera System. இது OPPO-வின் LUMO Image Engine மற்றும் Pro மாடலில் உள்ள பிரம்மாண்டமான 200MP Hasselblad Telephoto லென்ஸ் மூலம் இயங்குகிறது.
LUMO-வின் மந்திரம்: சிஸ்டம் முழுவதும் உண்மையான 50MP வெளியீட்டை இதுவே சாத்தியமாக்குகிறது.
Pro-வின் சிறப்பு: வழக்கமான Pixel binning முறைக்குப் பதிலாக, 200MP சென்சாரைப் பயன்படுத்தி உண்மையான, உயர்-தெளிவுத்திறன் கொண்ட விவரங்களை இது வழங்குகிறது.
வேகம்: இது Processing pipeline-ஐ முழுமையாக மறுகட்டமைப்பு செய்துள்ளதால், ISP, CPU, GPU மற்றும் NPU ஆகியவை ஒரே நேரத்தில் இயங்குகின்றன. இதன் விளைவு? எவ்வளவு பெரிய, அதிக டேட்டா கொண்ட படங்களாக இருந்தாலும், போனின் வேகம் துளியும் குறையாது.

ஆனால் உண்மையான கதை Resolution பற்றியது அல்ல. இந்தியா அளிக்கும் ஒளி அமைப்பு மற்றும் வேகத்தில் இந்த சிஸ்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதே முக்கியம். ஹோலி கொண்டாட்டத்தின் போது பிரகாசமான வெளிப்புற வெளிச்சம். இசைத் திருவிழாவில் மின்னும் Neon கோடுகள். தீபாவளி கொண்டாட்டங்களின் போது இதமான உள் அரங்க வெளிச்சம். ஜெய்ப்பூரின் நெரிசலான தெருவில் பின்னால் ஒளியிருக்கும் முகங்கள், கலவையான ஒளியின் கீழ் வியத்தகு முறையில் மாறும் சரும நிறங்கள், இவைதான் பெரும்பாலான கேமராக்கள் திணறும் சூழ்நிலைகள். OPPO Find X9 சிஸ்டம் இவற்றுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அசைவுகளை உறைய வைக்கும் தொழில்நுட்பம்: கடும் வெயிலோ அல்லது கச்சேரியின் மின்னும் விளக்குகளோ, எந்தச் சூழலாக இருந்தாலும், Advanced Scene Recognition மற்றும் Dynamic Exposure Mapping ஆகியவை நொடியில் தன்னை மாற்றிக்கொள்கின்றன. கேமராவுக்குக் கூச்சப்படும் நண்பர்கள், மைதானத்தில் ஓடும் குழந்தைகள், அல்லது ஒரே இடத்தில் அமராத செல்லப்பிராணிகள் என எதைப் படம் பிடித்தாலும், இதன் Active Optical Alignment சிஸ்டம் அசைவுகளுக்கு நடுவேயும் இயற்கையான நிறங்களையும், ஆழத்தையும் கச்சிதமாகத் தக்கவைக்கிறது.
தனியாகத் தெரியாமல் முடிவுகளை மேம்படுத்தும் AI-ஐ OPPO இதில் இணைத்துள்ளது. AI Denoise மற்றும் AI Demosaic ஆகியவை நாம் வழக்கமாகப் பார்க்கும் செயற்கையான மென்மையாக்கம் இல்லாமல் விவரங்களை மீட்டெடுக்கின்றன. HyperTone சிறப்பம்சங்கள் மற்றும் நிழல்களை நிர்வகிக்கிறது. Lightning Snap வேகமான அசைவுகளைத் தெளிவாகப் படம் பிடிக்கிறது. AI Portrait Glow, AI Eraser, AI Unblur மற்றும் Reflection Remover போன்ற அன்றாடக் கருவிகள் சீரற்ற வெளிச்சத்தைச் சரிசெய்யவும், கவனச்சிதறல்களை நீக்கவும் அல்லது Motion blur-ஐ சரிசெய்யவும் உதவுகின்றன.
இந்தியாவின் படைப்பாளிகளைப் பொறுத்தவரை, Edit செய்வது, திருத்துவது மற்றும் பகிர்வது என அனைத்தும் போனிலேயே நடப்பதால், வேலையின் வேகம் தடைபடாது.
செயல்திறன்: இந்தியர்களின் பயன்பாட்டு முறைக்காகவே கட்டமைக்கப்பட்ட அசுர வேகம்.
இந்தியப் பயனர்கள் தங்கள் சாதனங்களை கடினமாகப் பயன்படுத்துகிறார்கள், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் OPPO Find X9 Series நிலையான செயல்திறனுக்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இதன் இதயத்துடிப்பாக இயங்குவது, 3nm தொழில்நுட்பத்தில் உருவான MediaTek Dimensity 9500 Chipset. ஆனால், வெறும் ஹார்டுவேர் மட்டும் அந்த மென்மையான அனுபவத்தைத் தந்துவிடாது. இங்குதான் OPPO-வின் பிரத்யேக Trinity Engine களமிறங்குகிறது. MediaTek-உடன் இணைந்து இதற்கெனவே பிரத்யேகமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
CPU, GPU மற்றும் NPU ஆகியவை ஒவ்வொரு கணமும் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதை Trinity Engine நிர்வகிக்கிறது. இது Gaming-ன் போது Frame rates-ஐ சீராக வைத்திருக்கிறது, நீண்ட 4K பதிவுகளின் போது சாதனம் வெப்பமடைவதைத் தடுக்கிறது மற்றும் பின்னணியில் பல செயல்முறைகள் இயங்கும்போது செயலிகள் வேகம் குறையாமல் இருப்பதை உறுதி செய்கிறது. நீங்கள் கோப்புகளைப் பதிவிறக்கும்போதோ அல்லது அதிக Graphics கொண்ட கேம்களை விளையாடும்போதோ வீடியோவை Edit செய்தாலும், AI-ஆல் இயங்கும் மேம்படுத்தல்கள் சிஸ்டத்தை வேகமாக வைத்திருக்கும்.
பேட்டரி: இந்திய யதார்த்தங்களுக்கான தீர்வு! நமது நீண்ட நாட்கள், சலிப்பூட்டும் நீண்ட பயணங்கள், மற்றும் எப்போதும் திட்டமிட்டபடி நடக்காத சார்ஜிங் வழக்கம் போன்ற இந்தியப் பிரச்சனைகளுக்கு Find X9 ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. OPPO Find X9-ல் 7025 mAh பேட்டரியும், OPPO Find X9 Pro-ல் 7500 mAh பேட்டரியும் உள்ளது. இரவு வெகுநேரம் வரை சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்லை! 80W SUPERVOOC Wired, 50W AIRVOOC Wireless, மற்றும் 10W Reverse Charging வசதிகள் உங்களைக் கைவிடாது.
நீண்ட கால முதலீடு: இதன் அதிநவீன Silicon-Carbon Battery தொழில்நுட்பம், ஐந்து ஆண்டுகள் பயன்பாட்டிற்குப் பிறகும் 80%-க்கும் அதிகமான திறனைத் தக்க வைத்துக் கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் போனை மாற்ற விரும்பாத, கொடுக்கும் பணத்திற்கு நீண்ட கால உழைப்பை எதிர்பார்க்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு சிறந்த முதலீடு.
ஹார்டுவேர் வலிமையைத் தருகிறது என்றால், ColorOS 16 நுண்ணறிவைக் கொண்டு வருகிறது. இது ஆழமான AI ஒருங்கிணைப்பு, மென்மையான அனிமேஷன்கள் மற்றும் மிகவும் தனிப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட UI-ஐ அறிமுகப்படுத்துகிறது. மிக முக்கியமாக, இந்தியப் பயனர்கள் உண்மையில் தகவல்களைச் சேமிக்கும், தேடும் மற்றும் பகிரும் விதத்திற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
AI MindSpace என்பது ஸ்கிரீன்ஷாட்கள், குறிப்புகள், லிங்குகள், மீட்டிங் அழைப்புகள், போஸ்டர்கள், மெனு புகைப்படங்கள் எனப் பல்வேறு செயலிகளில் சிதறிக் கிடக்கும் விஷயங்களை ஒன்றிணைக்கிறது. மூன்று விரல்களில் ஸ்வைப் செய்தால் திரையில் தெரிவது சேமிக்கப்படும்; OPPO Find X9-ன் Snap Key-யும் இதையே செய்கிறது, மேலும் குரல் குறிப்பையும் இணைக்க முடியும்.
Google Gemini-யுடனான OPPO-வின் தனிப்பட்ட அறிவு ஒருங்கிணைப்பு தான் MindSpace-ஐ இன்னும் பயனுள்ளதாக மாற்றுகிறது. Gemini நீங்கள் சேமித்தவற்றிலிருந்து (பாதுகாப்பாக) தகவல்களைப் பெற்று, உங்கள் சூழலுக்கு ஏற்ற பதில்களை வழங்கும். நீங்கள் பாண்டிச்சேரிக்கு ஒரு வார சாலைப் பயணத்திற்கான திட்டம் கேட்டால், Gemini உங்கள் குறிப்புகள், Screenshots மற்றும் நிகழ்நேரத் தரவுகளைப் பயன்படுத்தி உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தை உருவாக்கும்.
உற்பத்தித் திறன் (Productivity): வேலைப்பளுவைக் குறைக்க AI Recorder கைகொடுக்கிறது. மீட்டிங்குகள் மற்றும் விரிவுரைகளை இது நிகழ்நேரத்தில் எழுத்து வடிவமாக மாற்றி , உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய சுருக்கவுரைகளை வழங்குகிறது. அதிக நேரத்தையும், மூளையின் ஆற்றலையும் உறிஞ்சும் சலிப்பான வேலைகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது.
வேலை, படிப்பு மற்றும் ஓய்வு நேரம் ஆகியவை பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று இருப்பதால், O+ Connect அந்தப் பணிப்போக்கை Mac மற்றும் Windows லேப்டாப்களுக்கு விரிவுபடுத்துகிறது; இது Screen mirroring, Multi-app control மற்றும் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தடையற்ற கோப்புப் பரிமாற்றங்களை அனுமதிக்கிறது.
தனியுரிமை என்பது ஒரு கூடுதல் அம்சமாக இல்லாமல், முக்கிய சிஸ்டம் அடுக்காகக் கருதப்படுகிறது. Private Computing Cloud மூலம், போனின் AI-ஆல் செயல்படுத்தப்படும் எதையும் – MindSpace-ல் நீங்கள் சேமிப்பது உட்பட – OPPO-வின் பாதுகாக்கப்பட்ட சூழலுக்குள் சீல் வைக்கப்படுகிறது. இதன் பொருள் உங்கள் ஸ்கிரீன்ஷாட்கள், எழுத்து வடிவங்கள், குறிப்புகள் மற்றும் பதிவுகள் வெளிப்புற சேவைகளுக்குத் தெரியாது அல்லது உங்கள் அனுமதியின்றி பகிரப்படாது.
OPPO Lock இரண்டாவது நடைமுறைப் பாதுகாப்பு அடுக்கைச் சேர்க்கிறது. உங்கள் போன் காணாமல் போனால், வாடிக்கையாளர் சேவையால் அதைத் தொலைவிலிருந்தே லாக் செய்ய முடியும். யாராவது SIM-ஐ கழற்றினாலோ அல்லது நெட்வொர்க்கைத் துண்டித்தாலோ, சாதனம் Biometric மற்றும் Password சோதனைகளுக்குப் பின்னால் தன்னைத் தானே முடக்கிக்கொள்ளும். கற்பனையான ஆபத்துக்களை விட மக்கள் உண்மையில் சந்திக்கும் அன்றாட ஆபத்துக்களுக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
OPPO Find X9 Series வெறும் அழகை மட்டும் தரவில்லை; நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வையும் தருகிறது. இதன் புதிய Floating Stack Architecture தொழில்நுட்பம், போனின் உட்புறக் கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது. கேமரா, கலர் சென்சார், லேசர் ஃபோகஸ் மற்றும் மைக்ரோஃபோன் என அனைத்தையும் ஒரே பகுதிக்கு அடியில் கச்சிதமாக அடுக்கி, போனின் அளவை அதிகரிக்காமலேயே பெரிய பேட்டரியைப் பொருத்த வழி செய்துள்ளது. இதை கையில் எடுத்த உடனேயே அந்த ‘Compact’ உணர்வை நீங்கள் கவனிப்பீர்கள்.
இதன் டிஸ்ப்ளே கிட்டத்தட்ட விளிம்பற்ற தட்டையான பேனலைக் கொண்டுள்ளது, இது நீண்ட நேரப் பயன்பாட்டிற்கு ஏற்ற High refresh rate மற்றும் PWM dimming வசதியைக் கொண்டுள்ளது. இது முதன்மை வேலை அல்லது பொழுதுபோக்கு சாதனமாகப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வசதியான மேம்படுத்தலாகும்.
நீண்ட காலப் பயன்பாட்டிற்காகப் பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன: கைரேகைகள் பதியாத Matte aluminium ஃப்ரேம்கள், Hasselblad-ஆல் ஈர்க்கப்பட்ட கேமரா மாட்யூல்கள் மற்றும் ஆடம்பரமாக இல்லாமல் ஒளியை ஈர்க்கும் பூச்சுகள். Titanium Grey, Space Black, Silk White மற்றும் Titanium Charcoal ஒவ்வொரும் தனித்துவமான ஆளுமையை வழங்குகின்றன.
இந்தியப் பயன்பாட்டின் தேவைகளை உறுதித்தன்மை பூர்த்தி செய்கிறது. Corning® Gorilla® Glass Victus® 2, IP66/IP68/IP69 தரவரிசைகள் மற்றும் SGS Five-Star Drop Resistance ஆகியவற்றுடன், OPPO Find X9 கணிக்க முடியாத வானிலை, நெரிசலான பயணங்கள் மற்றும் தற்செயலான சறுக்கல்களைத் தாங்கும். பெரிய பேட்டரிகள் இருந்தபோதிலும், இரண்டு மாடல்களும் மெலிதாகவே உள்ளன – OPPO Find X9 7.99 மிமீ மற்றும் OPPO Find X9 Pro 8.25 மிமீ.

தொடக்கத்திலிருந்தே, இந்தக் கதை எதிர்பார்ப்புகளை மாற்றுவதைப் பற்றியது – மக்கள் தங்கள் போன்கள் அதிகப்படியான வேளைகளைச் செய்ய வேண்டும், வேகமாகச் சிந்திக்க வேண்டும், நீண்ட காலம் உழைக்க வேண்டும் மற்றும் அன்றாட இந்திய வாழ்க்கையின் சலசலப்புக்கும் வண்ணத்திற்கும் ஏற்ப மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த மாற்றத்திற்கான OPPO-வின் பதில் நிலையானதாகவும் நோக்கத்துடனும் உள்ளது: Specs-க்குப் பதிலாகப் பயனர்களிடமிருந்து தொடங்கும் புதுமை, மற்றும் தினசரி நடைமுறைகளில் போன் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மதிக்கும் வடிவமைப்புத் தேர்வுகள்.
இது OPPO-வின் “Make Your Moment” தத்துவத்துடன் ஒத்துப்போகிறது. இது ஒரு பிராண்ட் வாசகம் என்பதை விட, ஒரு வடிவமைப்புக் கொள்கையாகும். முக்கியமானவற்றைப் படம் பிடியுங்கள். வேகமாக வேலை செய்யுங்கள். அதிகமாக உருவாக்குங்கள். நிகழ் கணத்தில் இருங்கள்.
OPPO Find X9 Series: இந்த அணுகுமுறையின் உச்சம்! இது வெறும் பகட்டுக்காகவோ அல்லது பெருமைக்காகவோ எல்லை மீறுவதில்லை.
வழக்கமாகப் போன்களைத் திணறடிக்கும் கடினமான சூழல்களை இதன் கேமரா சர்வ சாதாரணமாகக் கையாள்கிறது.
எல்லாமே ஒரே நேரத்தில் இயங்கும் நெருக்கடியான நாட்களைச் சமாளிக்கவே இதன் செயல்திறன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதன் AI கருவிகள் ஒரு நல்ல கருவி செய்ய வேண்டியதையே செய்கின்றன: “உங்கள் சிந்தனைக்கும், செயலுக்கும் இடைப்பட்ட நேரத்தைக் குறைக்கின்றன.”
இது OPPO-வின் மிக முழுமையான Flagship ஆகும். இது எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதனால் அல்ல, மாறாக தங்கள் போன்களைக் கடினமாகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதால். இன்று OPPO இந்த உயரத்தில் இருக்கிறது என்றால், நிறுவனத்தின் “India-first Flagship” தொலைநோக்குப் பார்வைக்கான பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது!

OPPO Find X9 Pro ஆனது OPPO e-store, Amazon, Flipkart மற்றும் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது, அதே நேரத்தில் OPPO Find X9-ஐ OPPO e-store, Flipkart மற்றும் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்கலாம். முழுமையான Hasselblad அனுபவத்தை விரும்பும் Creators-க்காக, Hasselblad Teleconverter Kit தனியாக OPPO e-store வழியாக மட்டுமே விற்கப்படுகிறது.
இந்தியாவில் ஒரு Flagship smartphone-க்கு வெறும் Specs மட்டும் போதாது. இது கலவையான ஒளி, மும்முரமான நாட்கள், அதிகப்படியான Multitasking மற்றும் உண்மையான ஆக்கப்பூர்வமான தேவைகளைக் கையாள வேண்டும். இந்திய ஒளிக்கு ஏற்ற கேமராக்கள், உண்மையான வேலைப்பளுவுக்கு ஏற்ற AI மற்றும் அன்றாட வசதியுடன் உறுதித்தன்மையை சமநிலைப்படுத்தும் வடிவமைப்புடன் OPPO Find X9 Series அந்தத் தரத்தை எட்டுகிறது.
Partnered Post
December 15, 2025 2:47 PM IST

