Last Updated:
சென்னை அப்துல் ஆசிப், ஸ்விக்கி மற்றும் zomato ஊழியராக பணியாற்றி, மாலத்தீவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மாலத்தீவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் அப்துல் ஆசிப், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு கேரம் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தந்தை இல்லாததால் இளம் வயதிலேயே குடும்ப சுமையை சுமக்கும் அப்துல் ஆசிப் பயிற்சி நேரங்களை குறைத்துக் கொண்டு ஸ்விக்கி மற்றும் zomato வில் உணவு டெலிவரி ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவில் ஏழாவது உலகக் கோப்பை கேரம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட அப்துல் ஆசிப் அதில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, மாலத்தீவு செல்ல தனக்கு உதவி செய்த முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அப்துல் ஆசிப் கூறினார்.
இதனிடையே, மாலத்தீவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு அந்த பகுதியினர் மட்டுமின்றி அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.
December 15, 2025 3:10 PM IST


