இந்திய சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு சர்வதேச சந்தையை விட அதிகமாக உள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,460க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,400க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.213க்கும், ஒரு கிலோ ரூ.2,13,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.


