Last Updated:
தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜோர்டான் புறப்பட்டுச் சென்றார்.
3 நாடுகள் பயணமாக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜோர்டான் புறப்பட்டுச் சென்றார்.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார். இதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். பனிமூட்டம் காரணமாக, காலை 8.30 மணிக்கு புறப்பட இருந்த இவரது விமானம், 9.30 மணிக்கு புறப்பட்டது.
ஜோர்டான் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்திக்கிறார். இந்தப் பயணத்தின்போது, இந்தியா – ஜோர்டான் இடையிலான உறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து அந்நாட்டு மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் ஜோர்டான் வாழ் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், பிரதமர் மோடி எத்தியோப்பியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்க உள்ளார். அதன் பிறகு, வரும் 17ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை, ஓமன் நாட்டிற்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக செல்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
December 15, 2025 12:35 PM IST


