Last Updated:
தர்மசாலாவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி; ஹர்ஷ்சித் ராணா, குல்தீப் யாதவ், ஹர்ஸ்திப் சிங் சிறப்பாக விளையாடினர்.
தர்மசாலாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டி20 போட்டி தர்மசாலா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக ஹர்சித் ராணாவும் உடல்நலக் குறைவு காரணமாக அக்ஷர் படேல் பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. ஹென்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் டி காக் ஒரு ரன்னிலும் அடுத்து வந்த பிரவிஸ் 2 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
ஒரு பக்கம் விக்கெட்டை பறிக்கொடுத்தாலும் கேப்டன் ஏய்டன் மார்கரம் நிதானாமாக விளையாடி 46 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து அவுட்டானார். மார்கரமின் பொறுப்பான ஆட்டம் காரணமாக தென்னாப்பிரிக்கா 100 ரன்களை கடந்தது. இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஸ்திப் சிங், ஹர்ஷ்சித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலுக்குடன் விளையாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அபிஷேக் மற்றும் கில் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். அபிஷே் ஷர்மா 35 ரன்களிலும் சுப்மன் கில் 28 ரன்களிலும் சூர்யகுமார் 12 ரன்களிலும் அவுட்டாகினர். இறுதியாக இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. திலக் வர்மா 25 ரன்கள் மற்றும் துபே 10 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
December 14, 2025 10:22 PM IST
Ind vs SA | தர்மசாலா டி20… தென்னாப்பிரிகாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி


