Last Updated:
SIR வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொடர்பான வழக்குகளை வரும் 17ஆம் தேதி விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான தமிழ்நாடு தொடர்பான வழக்குகள் வரும் 17ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும், அடுத்த மாத இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, SIR தொடர்பாக புதிய வழக்குகள் அனுமதிக்கப்படாது என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொடர்பான வழக்குகளை வரும் 17ஆம் தேதி விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதே போன்று, ஒவ்வொரு மாநிலம் தொடர்பான வழக்குகளையும் ஒவ்வொரு தேதிகளில் விசாரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இம்மாதத்திற்குள் அனைத்து வாதங்களையும் முடித்து விட்டு, அடுத்த மாத இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
Delhi,Delhi,Delhi
December 11, 2025 1:47 PM IST


