Last Updated:
2027 உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரை மனதில் வைத்து அணிக்கு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வரும் நிலையில், இதற்காக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2க்கு 0 என்ற கணக்கில் இழந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
தற்போ 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. கட்டாக்கில் நடைபெற்ற முதல் டி20-யில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மற்ற வீரர்கள் அணியில் இருக்கும் சூழலில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியதாவது: “ஹர்ஷித் ராணாவை பவுலிங் ஆல்ரவுண்டராக உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். 2027 உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரை மனதில் வைத்து அணிக்கு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.
December 10, 2025 10:20 PM IST


