Last Updated:
மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் இந்த ரிட்டன்கள் சந்தை அபாயங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதை மறந்து விடாதீர்கள்.
பல இந்தியர்கள் தங்களுடைய பணத்தை சேமிப்பு கணக்குகளிலேயே அப்படியே வைத்து விடுகின்றனர். பணப்புழக்கம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் இருப்பதே அவர்கள் இவ்வாறு செய்வதற்கான காரணம். எந்த நேரத்திலும் தங்களுடைய பணத்தை வித்ட்ரா செய்து கொள்ளலாம் என்ற காரணத்திற்காக இதை செய்தாலும், இந்த சௌகரியமானது ஒரு குறிப்பிட்ட செலவோடு வருகிறது.
சேமிப்பு கணக்குகளில் இருந்து உங்களுக்கு வரும் ரிட்டன்கள் பணவீக்கத்தோடு போட்டி போட முடியாமல் படிப்படியாக உங்களுடைய பணத்தின் மதிப்பை குறைக்கிறது. வழக்கமாக சேமிப்பு கணக்குகளுக்கு ஒரு ஆண்டுக்கு 2.5% முதல் 3% வரையிலான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. ஆனால் பணவீக்கமானது பொதுவாக 6 சதவீதம் அளவில் உள்ளது. இதன் விளைவாக ஒரு பெரிய அளவிலான தொகையை சேமிப்பு கணக்கில் அப்படியே வைப்பது நீண்டகால செல்வ வளர்ச்சிக்கு ஒரு தடையாக அமைகிறது. எனவே உங்களிடம் ஒரு கணிசமான தொகை இருந்தால், உதாரணமாக 2 லட்சம் இருக்கும் பட்சத்தில் அதனை அப்படியே உங்களுடைய சேமிப்பு கணக்கில் வைத்து விடுவதால் பிரயோஜனம் ஒன்றும் கிடையாது.
மாறாக அதனை பிற சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலமாக அதிக ரிட்டன்களை பெறலாம். எனவே உங்களுடைய பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் SIPகள் மற்றும் ஃபிக்சட் டெபாசிட்டுகளில் சமமாக பிரித்து முதலீடு செய்வதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
மொத்த முதலீடு: ஒரு லட்ச ரூபாய்
முதலீட்டு கால அளவு: 5 வருடங்கள்
எதிர்பார்க்கப்படும் வட்டி விகிதம்: 12 சதவீதம்
மதிப்பிடப்பட்ட ரிட்டன்கள்: 76,234 ரூபாய்
மெச்சூரிட்டி தொகை: 1.76 லட்ச ரூபாய்
ஃபிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்தல்:
மொத்த முதலீடு: ஒரு லட்ச ரூபாய்
முதலீட்டு கால அளவு: 5 வருடங்கள்
எதிர்பார்க்கப்படும் வட்டி விகிதம்: 7 சதவீதம்
மதிப்பிடப்பட்ட ரிட்டன்கள்: 40,255 ரூபாய்
மெச்சூரிட்டி தொகை: 1.4 லட்சம் ரூபாய்
மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் இந்த ரிட்டன்கள் சந்தை அபாயங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதை மறந்து விடாதீர்கள். இந்த கணக்கீட்டின்படி 2 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஃபிக்சட் டெபாசிட்களின் முதலீடு செய்வதன் மூலமாக 5 வருடங்களில் உங்களால் 1.16 லட்சம் ரூபாயை ரிட்டனாக பெற முடியும். இது சேமிப்பு கணக்கு மூலமாக பெறப்படும் ரிட்டன்களை விட பெரிய தொகையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு காலம் உங்களுடைய பணத்தை முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு கூட்டு வட்டி முறையில் உங்களுடைய பணம் விரைவாக வளரும்.
உங்களுடைய போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்துவதற்கு உங்களிடம் இருக்கும் தொகையை நீங்கள் தங்கம், ரியல் எஸ்டேட், பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) மற்றும் பிற முதலீட்டு கருவிகளில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் பல்வேறு கருவிகளில் முதலீடு செய்யும் போது ரிஸ்க் குறைந்து, நிலையான ரிட்டன்களை எதிர்பார்க்கலாம்.
December 10, 2025 2:28 PM IST
சேமிப்பு கணக்கில் தூங்கி கொண்டிருக்கும் பணத்தை முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?


