Last Updated:
Indigo | 2025-26ஆம் ஆண்டில் குளிர்கால அட்டவணையின்படி இண்டிகோ விமான நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2,200 விமான சேவைகளை இயக்கி வரும் நிலையில், இது கடந்த ஆண்டைவிட 9.66% அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகளில் 10 சதவிகிதத்தைக் குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பட்ஜெட் விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோ உள்ளது. இந்நிலையில், விமானிகளுக்கான புதிய பணி முறை விதிகளால், இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாட்களாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து பெரும் சிக்கலுக்கு ஆளானது. இதனால், நாள்தோறும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். பிரச்சனைகள் முழுமையாக சரி செய்யப்படாவிட்டாலும் மெல்ல மெல்ல இயல்பு நிலையை நோக்கி அந்த நிறுவனம் திரும்பி வருகிறது.
இதற்கிடையே, 2025-26ஆம் ஆண்டில் குளிர்கால அட்டவணையின்படி இண்டிகோ விமான நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2,200 விமான சேவைகளை இயக்கி வரும் நிலையில், இது கடந்த ஆண்டைவிட 9.66% அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் உள்நாட்டு சேவையில் மொத்தம் 65 சதவிகிதத்தை இண்டிகோவே பூர்த்தி செய்யும் நிலையில், இண்டிகோவை மட்டுமே மக்கள் அதிகமாக நம்பி இருப்பதே தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இண்டிகோவின் 10% விமானச் சேவைகளைக் குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. விமானங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இண்டிகோவின் சேவைகளை படிப்படியாக குறைத்து அதற்கான வழித்தடத்தில் பிற நிறுவனங்களின் விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
December 10, 2025 7:22 AM IST


