Last Updated:
வாசிம் அக்ரம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்ப காலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடி இருக்கிறார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்பு விளையாடியவருமான வாசிம் அக்ரம் ஐபிஎல் குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று மிகவும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரைப் பின்பற்றி உலகெங்கிலும் கிரிக்கெட் விளையாடப்படும் நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
இதன் மூலம் ஏராளமான திறமை மிக்க வீரர்கள் தேசிய அணிக்கு கிடைக்கிறார்கள். அத்துடன் பொருளாதார ரீதியிலும் இந்த 20 ஓவர் போட்டித் தொடர்கள் மிகுந்த வெற்றியை கொடுத்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதைப் போன்று பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் எனப்படும் பி.எஸ்.எல். கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்ப காலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் பல்வேறு தருணங்களில் அவர் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “இரண்டரை முதல் 3 மாதங்கள் வரை நடக்கும் டி20 லீக் தொடர்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ஐபிஎல் தொடரை மறைமுகமாக விமர்சித்து இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறியுள்ளனர். தற்போது வாசிம் அக்ரம் பி.எஸ்.எல். கிரிக்கெட் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் நிர்வாக கமிட்டி தலைவராகவும், அந்த அணியின் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.
December 09, 2025 7:42 PM IST


