Last Updated:
இண்டிகோ நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில், குளிர்கால அட்டவணையில் 5 சதவீத சேவையை குறைக்க விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் 79,360 விமான சேவைகளுக்கு அனுமதி தரப்பட்டிருந்த நிலையில், அதில் 951 சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு விமான சேவையில் இருந்து 5 சதவீதத்தை குறைத்து புதிய அட்டவணையை புதன்கிழமைக்குள் வெளியிட இண்டிகோ நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, விதிகளும் சட்டங்களும் நல்லவை என்ற பிரதமர் மோடி, அதே சமயம் கட்டமைப்பை சரிசெய்ய மக்களை துன்புறுத்துவது சரியல்ல என்று கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றி அவர், , பயணிகளின் வசதி மட்டுமே மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் இண்டிகோ நிறுவனத்தில் செயல்பாட்டுத் தோல்விகளால் அண்மையால் ஏற்பட்ட இடையூறுகள் சீரடைந்து வருவதாக மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். இண்டிகோ தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பி விரிவான விசாரணை தொடங்கி உள்ளதாகவும் அவர் விவரித்தார்.
December 09, 2025 4:25 PM IST


