Last Updated:
மாதவிடாய் காலத்தில், பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கர்நாடக அரசின் உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
மாதவிடாய் காலத்தில், பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கர்நாடக அரசின் உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
முன்னதாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதாந்திர விடுப்பு வழங்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கர்நாடக தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, பெங்களூருவைச் சேர்ந்த ஹோட்டல்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது விடுப்பு வழங்குவது குறித்து நிறுவனங்களுடன் அரசு ஆலோசித்ததா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அல்லது ஆட்சேபனைகளை தெரிவிக்க கருத்து கேட்பு கூட்டமாவது நடத்தப்பட்டதா என்றும் வினவினர்.

இதைத்தொடர்ந்து மாநில அரசின் உத்தரவை நிறுத்திவைப்பதாக கூறிய நீதிபதிகள், இந்த இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மாநில அரசு முறையிடலாம் என்றும் அனுமதி அளித்தனர். மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை குளிர்கால விடுமுறைக்குப் பிறகு விசாரிப்பதாக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
December 09, 2025 4:26 PM IST


