Last Updated:
TVK Vijay Speech | புதுச்சேரியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் பேசிய விஜய் கூட்டணியில் இருக்கும் பாஜகவை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, முதல் முறையாக தவெக தலைவர் விஜய் பொதுவெளியில் பங்கேற்கும் நிகழ்ச்சி புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. ஸ்கேனிங் முறையில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து அனைவரும் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுப்பப்பட்டனர். பிறகு நிகழ்ச்சி மேடைக்கு வந்த விஜய், ரசிகர்கள் கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசிற்கு தான் தமிழ்நாடு, புதுச்சேரி தனித்தனி மாநிலம். ஆனால் நமக்கு நாம் அனைவரும் ஒன்றுதான். தனி மாநிலங்களாக இருப்பதால் நாம் அனைவரும் சொந்தங்கள் இல்லை என்று கிடையாது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் எம்ஜிஆரை மிஸ் பண்ணிடாதீங்க என்று அலர்ட் செய்தது புதுச்சேரி மாநிலம் தான். விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பான் என்று நினைக்காதீர்கள். அது தவறு புதுச்சேரி பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு புதுச்சேரி அரசு நன்றாக பாதுகாப்பு கொடுப்பதாகவும், இதைப் பார்த்து தமிழ்நாட்டு முதலமைச்சர் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள் வரும் தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. புதுச்சேரி மாநில அந்தஸ்து கேட்டு பலமுறை சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியும் இதுவரை கொடுக்கவில்லை. வேலைவாய்ப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கவில்லை, ஐடி கம்பெனிகளை உருவாக்கவில்லை, 200 நாட்களாக ஒரு அமைச்சருக்கு இலக்காக ஒதுக்கவில்லை. காரைக்கால் மொத்தமாக கைவிட்டு பகுதியாக தான் உள்ளது என்று மத்திய அரசை சாடினார்.
மேலும், புதுச்சேரியில் போதிய அளவில் பார்க்கிங் வசதிகள் இல்லை என்றும், போதிய கழிப்பிட வசதிகள் இல்லை எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதன் பிறகு புதுச்சேரி மக்களுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன் திமுகவை நம்பாதீங்க, புதுச்சேரிக்கு போதிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்காதால் கடன் வாங்கு வேண்டிய சூழல் உள்ளது. இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத மாநில மாக புதுச்சேரி உள்ளது. புதுச்சேரி மக்களுக்காக இந்த விஜய் எப்பவும் துணை நிற்பான். சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி புதுச்சேரியில் வெற்றி கொடியுடன் பறக்கும் என்று பேசியுள்ளார்.
பிற்பகல் 12.30மணிக்குள் விஜய் புறப்பட்டு விட வேண்டும் என்ற உத்தரவு இருப்பதால் வெறும் 10 நிமிடத்தில் விஜய் பேசி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
December 09, 2025 11:49 AM IST


