மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கிரெடிட் கார்டு வரம்புகளை அதிகரிக்க விரும்புகிறீர்களா எனக் கேட்பார்கள், அதற்கு வாடிக்கையாளர்கள் ஒப்புக்கொண்டால், கார்டு நம்பர், CVV, காலாவதி தேதி மற்றும் மொபைல் போனில் பெறப்பட்ட OTP போன்ற ரகசிய விவரங்களைக் கேட்டு, பின்னர் பணத்தைப் பறிப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், கிரெடிட் கார்டு மோசடியில் சிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய 5 முன்னெச்சரிக்கைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.


