எனவே, பெட்ரோல் நிரப்ப செல்கிறீர்கள் என்றால், காரை விட்டு இறங்கி, ஊழியர் மீட்டரை பூஜ்ஜியத்தில் வைத்து பின்பு பெட்ரோல் நிரப்புகிறாரா என்பதை சரிபார்க்க வேண்டும். இதனால் நீங்கள் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்பிக்கலாம். 100, 200, 500 மற்றும் 1000 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். ஆனால், இதுதான் ஒரு பெரிய மோசடிக்கான வழி என்று கூறப்படுகிறது. பல பெட்ரோல் பங்குகளில், இந்த ரூபாய்க்கு இயந்திரம் முன்பே நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினால், அதைவிட குறைவான பெட்ரோலே கிடைக்குமாம்.


