Last Updated:
நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட விமானப் போக்குவரத்து இடையூறுகளுக்கு இண்டிகோ நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட விமானப் போக்குவரத்து இடையூறுகளுக்கு இண்டிகோ நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
விமான சேவை முடங்கியதற்கான விளக்கம் அளிக்க கோரி இண்டிகோ நிறுவன சி.இ.ஓ. பீட்டர் எல்பர்ஸுக்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அளித்திருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள அந்நிறுவனம், நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட விமானப் போக்குவரத்து இடையூறுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும், குளறுபடிக்கான சரியான காரணத்தை உடனடியாக கூறுவது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. விரிவான மூல காரண பகுப்பாய்வை முடிக்க கூடுதல் அவகாசம் தேவை எனக் கோரியுள்ள இண்டிகோ, பகுப்பாய்வுக்குப் பின் முழு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளது. அதேநேரம், ஐந்து காரணிகளால் இந்த இடையூறு ஏற்பட்டதாக இண்டிகோ நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி, சிறிய அளவிலான தொழில்நுட்ப கோளாறு, குறுகிய கால அட்டவணை மாற்றங்கள், மோசமான வானிலை, விமான போக்குவரத்து அமைப்பின் நெரிசல் மற்றும் விமான குழுவிற்கான பணிப்பட்டியல் விதிகளை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் ஆகியவை பிரச்னைக்கு வித்திட்டதாகக் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, இண்டிகோவின் பதிலை மதிப்பாய்வு செய்து வருவதாகக் கூறியுள்ள டிஜிசிஏ, தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை உடன் ஒப்பிடுகையில் நேற்று 300 விமானங்கள் அதிகமாக இயக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளைக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், விமானம் ரத்து செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை சுமார் 569 கோடி ரூபாய் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இண்டிகோ விமான சேவை நாளை இயல்பு நிலைக்கு திரும்பும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 09, 2025 6:49 AM IST


