Last Updated:
அமித் ஷா அகமதாபாத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாடு, மேற்குவங்க தேர்தலில் வெற்றி பெறும், திமுக, திரிணமுல் காங்கிரஸ் தோற்கும் என கூறினார்.
தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், திமுக துடைத்தெறியப்படும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை பாஜக தொடர் வெற்றிகளைப் பெற்று வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறிய அமித் ஷா, மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லியை தொடர்ந்து பிகாரிலும் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டிருப்பதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை நிராகரித்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
பிகார் தேர்தலை போலவே, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
December 08, 2025 3:23 PM IST
“தமிழக தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெறும்… திமுக துடைத்தெறியப்படும்” – மத்திய அமைச்சர் அமித் ஷா


