Last Updated:
இண்டிகோ சேவை பாதிப்பால் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய கட்டணங்கள் அமல்படுத்தும் பணியை தொடங்கியது.
இண்டிகோ விமானங்கள் ரத்தானபோது, எகனாமிக் வகுப்புகளுக்கு வசூலிக்கப்பட்ட கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திரும்ப அளிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிப்பால், மற்ற விமான நிறுவனங்களின் டிக்கெட் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவுக்கு அதிகபட்ச விமான கட்டணமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோன்று தூரங்களுக்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், உச்ச வரம்பை மீறி விமானக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க, ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் புதிய கட்டணங்களை அமல்படுத்தும் பணியை தொடங்கியதாக தெரிவித்துள்ளது. அடுத்த சில மணி நேரத்தில் படிப்படியாக முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் எகனாமிக் வகுப்பில் முன்பதிவு செய்திருந்த பயணிகள், கூடுதலாக செலுத்திய கட்டணத்தை திரும்ப பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Delhi,Delhi,Delhi
December 08, 2025 4:26 PM IST


